திருப்பத்தூர் மாவட்டத்தில் மாபெரும் தூய்மை பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த தூய்மை பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த தூய்மை பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
தூய்மை பணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 208 ஊராட்சிகளிலும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், நாட்'றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் மாபெரும் தூய்மை பணிகள் மேற்கொள்ளபட்டது.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள திருமால் நகரில் நடைபெற்ற மாபெரும் தூய்மை பணி நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெருக்களை சுத்தம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாடப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூய்மையான மாவட்டமாக...
அப்போது கலெக்டர் கூறுகையில் தூய்மைபடுத்தும் பணிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேகரிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் அக்கற்றப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றிட தன்னார்வலர்கள், பொது மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை இணைத்துக்கொண்டு பணியை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, மாடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, நகர மன்ற உறுப்பினர் வெற்றிகொண்டான், உதவும் உள்ளம் தலைவர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் விவேக் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story