பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுமா?; பசவராஜ் பொம்மை பதில்

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பசவராஜ் பொம்மை பதில் கூறியதாவது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் இதுகுறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்களுக்கு கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-
"கர்நாடகத்தில் மீண்டும் பெட்ரோல் விலை குறைக்க முடியுமா? என்பதை அரசு பார்க்கும். பொருளாதாரத்தையும் அரசு அவசியம் கவனிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார். கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக அரசு பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7 வரை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story