நிர்வாண வீடியோவை வாட்ஸ்-அப்பில் காதலன் வெளியிட்டதால் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி
கல்வராயன்மலையில் நிர்வாண வீடியோவை வாட்ஸ்-அப்பில் காதலன் வெளியிட்டதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்தார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கச்சிராயப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஐ.டி.ஐ. மாணவர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
அவ்வப்போது தனிமையில் சந்தித்தும், செல்போனில் வீடியோ கால் மூலமாக பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
மாணவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிளஸ்-2 மாணவி நிர்வாணமாக வீடியோ காலில் அவருடன் பேசியுள்ளார். இதனை அந்த மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் பிளஸ்-2 மாணவி திடீரென தனது காதலனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தன்னிடம் மாணவி நிர்வாணமாக பேசிய வீடியோவை வாட்ஸ்-அப் மூலமாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
போலீசார் விசாரணை
இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்ததும் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து. வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது.
இதைபார்த்து பதறிய உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்து வருகின்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story