மனைவியை தாக்கிய மெக்கானிக் கைது

குளச்சல் அருகே மனைவியை தாக்கிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
குளச்சல்,
குளச்சல் அருகே மனைவியை தாக்கிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
கைது
குளச்சல் அருகே ஆலஞ்சியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 40), ஏ.சி.மெக்கானிக். இவருக்கும், மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளையை சேர்ந்த ஜெபமாலை கலிக்சா (29) என்பவருக்கும் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்து பிரான்சிஸ் சேவியர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஜெபமாலை கலிக்சாவை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று பிரான்சிஸ் சேவியர், மனைவி ஜெபமாலை கலிக்சாவை ஆபாசமான வார்த்தையால் திட்டியதோடு வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து குளச்சல் போலீசில் ஜெபமாலை கலிக்சா கொடுத்த புகாரின் பேரில் பிரான்சிஸ் சேவியர், மாமியார் லில்லிபாய் மற்றும் உறவினர் மெரின் சுபஜா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் சேவியரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story