நிதி நிறுவன ஊழியரை கட்டையால் அடித்துக்கொலை செய்த தம்பி கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 April 2022 11:51 PM IST (Updated: 28 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

நச்சலூரில் நிதி நிறுவன ஊழியரை கட்டையால் அடித்துக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நச்சலூர், 
நிதி நிறுவன ஊழியர்
கரூர் மாவட்டம் நச்சலூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன்கள் புகழேந்தி (வயது 46), ராஜ்மோகன் (41), லோகநாதன் (36) ஒரே வீட்டில் தனித்தனி அறையில் வசித்து வருகின்றனர். இதில் புகழேந்திக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ராஜ்மோகன், லோகநாதன் ஆகியோருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இதில் ராஜ்மோகன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து ராஜ்மோகன், லோகநாதன் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஊரான நச்சலூருக்கு வந்துள்ளனர். 
அடித்துக்கொலை
இதைதொடர்ந்து சம்பவத்தன்று இரவு அண்ணண் தம்பிகளான புகழேந்தி, ராஜ்மோகன், லோகநாதன் ஆகியோர் வீட்டில் அமர்ந்து குடும்ப சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ராஜ்மோகனுக்கும், லோகநாதனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன் மரக்கட்டையால் ராஜ்மோகனை அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடினார்.
கைது
இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லோகநாதனை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து லோகநாதனை குளித்தலை போலீசார் கைது செய்து குளித்தலை ஜே.எம்-2 நீதிமன்ற மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்படி லோகநாதன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story