புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 April 2022 6:49 PM GMT (Updated: 2022-04-30T00:19:33+05:30)

புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.

நொய்யல், 
புகழூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புகழூர் நகராட்சி ஹைஸ்கூல் வீதி முதல் பாலத்துறை வரை மழை நீர் வடிகால் அமைத்தல், குறுக்குபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், புகழூர் நகராட்சிக்கு புதிய தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுதல், புதிய சந்தைகள் அமைத்தல், புதுப்பித்தல் பணி செய்தல், புகழூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகத்தை கேட்டு கொள்வது என்பன உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 22-வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story