பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக்கோரி நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக்கோரி நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 8:13 PM GMT (Updated: 2022-04-30T01:43:51+05:30)

தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில், 
தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இணையான ஆங்கில வழி கல்வி தொடங்கிட அனுமதிக்க வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும், ஆசிரியருக்கு என தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட தலைவர் பினோபா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் நாயகம், பொருளாளர் பிரேம் ஜெயராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில துணைத்தலைவர் ஜான் உபால்டு போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தியாகராஜன்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுேரஷ் குமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் ஏராளமான ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story