விழுப்புரத்தில் ஊர்காவல் படை பெண் காவலரிடம் பணம் கேட்டு மிரட்டல் உறவினர் மீது வழக்கு


விழுப்புரத்தில் ஊர்காவல் படை பெண் காவலரிடம் பணம் கேட்டு மிரட்டல் உறவினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 April 2022 5:16 PM GMT (Updated: 2022-04-30T22:46:42+05:30)

விழுப்புரத்தில் ஊர்காவல் படை பெண் காவலரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் நெல்சன் மனைவி கவுசல்யா (வயது 42). இவர் விழுப்புரம் ஊர்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்சன் இறந்துவிட்ட நிலையில் கவுசல்யா தனியாக வசித்து வருகிறார். 

இவருடைய அக்காவின் கணவரான விழுப்புரம் தாயுமாணவர் தெருவை சேர்ந்த தாமஸ் (50) என்பவர் குடிபோதையில் வீட்டிற்குள் புகுந்து பணம் கேட்டு கவுசல்யாவை மிரட்டுவதாக புகார் எழுந்தது. 


இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றார். 

பின்னர் தாலுகா போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கவுசல்யா அளித்த புகாரின்பேரில் தாமஸ் மீது விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story