அரூர் அருகே வேன் மோதி விவசாயி சாவு

அரூர் அருகே வேன் மோதி விவசாயி இறந்தார்.
அரூர்:
அரூர் அருகே உள்ள மாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). விவசாயி. இவர் தனது மனைவி குப்பாயிவுடன் மாம்பட்டியில் இருந்து அரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். மாம்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். குப்பாயிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story