ஓடையில் மணல் அள்ளிய லாரி டிரைவர் கைது


ஓடையில் மணல் அள்ளிய லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 1:51 AM IST (Updated: 1 May 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே ஓடையில் மணல் அள்ளிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார், சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் உள்ள புத்தர் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையில் லாரியில் 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் சங்கரன்கோவில் அருகே தர்மத்தூரணியைச் சேர்ந்த பச்சைமால் மகன் லாரி டிரைவர் ரமேஷ் கண்ணன் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story