சேதமடைந்த நிலையில் சமுதாயக்கூடம்


சேதமடைந்த நிலையில் சமுதாயக்கூடம்
x
தினத்தந்தி 2 May 2022 2:06 AM IST (Updated: 2 May 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் அருகே சித்துக்காடு கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சமுதாய கூடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே சித்துக்காடு கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சமுதாய கூடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சமுதாயக்கூடம்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் உள்ளது. தற்போது இந்த சமுதாயக்கூடம் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் நெல் அறுவடை காலங்களில் மட்டும் இந்த சமுதாயக்கூட வளாகத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் முழுவதும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இடித்து அகற்ற கோரிக்கை
சமுதாய கூடம் அமைந்துள்ள பகுதியில் நூலகம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை அமைந்துள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் சேதமடைந்துள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story