கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 10:04 PM IST (Updated: 2 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ராயக்கோட்டை ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கஞ்சப்பன் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு, திட்டப்பணிகள், குடிநீர், தெருவிளக்கு, பாதை வசதி உட்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சந்திரகுமார் நன்றி கூறினார்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாது கோபால் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் ரவி கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி செயலாளர் சரவணன் தீர்மானங்கள் வாசித்தார். 
கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர். கூட்டத்தில் ஊர் நகர மகளிர் அலுவலர் செல்வகுமார். குழந்தைகள் உதவி மையம் அணி உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவிந்தாபுரம்
ஊத்தங்கரை ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி ராஜா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கணக்கர் பிரபாகரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.
கோவிந்தாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பெருமாள் தலைமை தாங்கினார். துணை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரப்பட்டு
ரெட்டிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் ரமாதேவி கோவிந்தன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பச்சையம்மாள் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் ராவ், ஊராட்சி செயலாளர் சாரதி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர்
பர்கூர் அருகே ஒப்பதவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சமயபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். இதில் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை பிரச்சினைகள் தேவைகள் குறித்து பொதுமக்கள் மனு வழங்கினர். 
அதைத் தொடர்ந்து கிராம ஊராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ராம கணேஷ், ஊராட்சி உதவி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி ஜெயவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஆனந்தன் செய்திருந்தார்.

Next Story