முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றும் திட்டம் இல்லை-மந்திரி உமேஷ்கட்டி

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றும் திட்டம் இல்லை என மந்திரி உமேஷ்கட்டி தெரிவித்துள்ளார்
பெலகாவி: உணவுத்துறை மந்திரி உமேஷ்கட்டி பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குஜராத்தில் ஒட்டுமொத்த மந்திரிசபை மாற்றப்பட்டது குறித்து பேசினார். அவரது கருத்துக்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டியது இல்லை.
கர்நாடக சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் எதிர்கொள்வோம். பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக வந்த பிறகு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அவரை மாற்றும் திட்டம் இல்லை. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு உமேஷ்கட்டி கூறினார்.
Related Tags :
Next Story