தொழில்கடன் வழிகாட்டும் பயிற்சி


தொழில்கடன் வழிகாட்டும் பயிற்சி
x
தினத்தந்தி 3 May 2022 12:00 AM IST (Updated: 3 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

தொழில்கடன் வழிகாட்டும் பயிற்சி

தொண்டி
திருவாடானையில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தனிநபர் தொழில் முனைவோர்களுக்கான நுண்நிதி தொழில் கடன் வழிகாட்டும் பயிற்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார அணித்தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். திட்ட செயலாக்குனர் சித்திரவேலு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அலுவலர் ராஜபாண்டி, தொழில் நிதி அலுவலர் தன சேதுபதி, தொழில் வளர்ச்சி அலுவலர் தேவி ஆகியோர் கலந்து கொண்டு நுண் நிதி தொழில் கடன் பெறுவதற்கான பயிற்சி அளித்தனர். இதில் திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த 47 ஊராட்சி அளவிலான தொழில்சார் சமூக வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

Next Story