இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2022 11:38 PM IST (Updated: 3 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு பஸ் நிலையம் எதிரில் பேரணாம்பட்டு, பாலூர், அழிஞ்சிகுப்பம், குடியாத்தம், பள்ளிகொண்டா சிவனடியார்கள் குழு மற்றும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் புருட்டஸ் என்ற சமூக வலைதளத்தில் இந்துக்கள் வணங்கும் தில்லை நடராஜரின் நடன தாண்டவம் குறித்து இழிவு படுத்தியுள்ளதை கண்டித்தும், இதற்கு காரணமானவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதனைத்தொடர்ந்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபுவிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுக்கப்பட்டது.

Next Story