பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படுமா?

சதுரகிரிக்கு ஓடைகளை கடந்து செல்ல பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரிக்கு ஓடைகளை கடந்து செல்ல பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
7 ஓடைகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, எழும்பு ஓடை, சங்கிலி பாறை ஓடை, பலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, கோண தலைவாசல் மேடு, வழுக்குப்பாறை, சுந்தரமகாலிங்கம் கோவில் சன்னதிக்கு எதிரே உள்ள ஓடை என 7 ஓடைகள் உள்ளன.
மழை காலங்களில் இந்த ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
பக்தர்கள் வேதனை
மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் ஓடைகள் மற்றும் பாறை பகுதிகளை கடந்து செல்வதற்கு இரும்பு பாலம், இரும்பு கைப்பிடி அமைக்க வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கள ஆய்வினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மேற்கொண்டனார்.
ஆய்வு பணி தொடங்கி ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை பணி தொடங்குவதற்கு உண்டான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை
மேலும் அவர்கள் கூறுகையில், பக்தர்கள் நீர் ஓடை பகுதி மற்றும் பாறைப்பகுதிகளை சிரமமின்றி கடந்து சென்று வர உடனடியாக இரும்பு பாலங்கள் மற்றும் கைப்பிடிகள் அமைக்கும் பணியினை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
Related Tags :
Next Story