ஊதுபத்தி ஏற்றி வருவதுபோல் புகையிலை பொருட்கள் கடத்தல்


ஊதுபத்தி ஏற்றி வருவதுபோல் புகையிலை பொருட்கள் கடத்தல்
x
தினத்தந்தி 4 May 2022 1:54 AM IST (Updated: 4 May 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

லாரியில் ரகசிய அறை அமைத்து ஊதுபத்தி ஏற்றி வருவதுபோல் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்

கும்பகோணம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வரப்படுவதாக தஞ்சையில் உள்ள தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் பெரிய கடைவீதியில் வந்த ஒரு லாரியை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
ரகசிய அறை அமைத்து
இதில் பெங்களூருவில் இருந்து ஊதுபத்தி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது லாரியின் ஒரு பகுதியில் ரகசிய அறை அமைத்து அதில் ஒரு டன் புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 
6 பேரிடம் விசாரணை
இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனர். 
அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 6 பேரிடம் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ 12½ லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story