மணல் வியாபாரியை மிரட்டி ‘மாமூல்' வசூலித்த 2 ரவுடிகள் கைது
தாவணகெரேயில், மணல் வியாபாரியை மிரட்டி ‘மாமூல்' வசூல் செய்து வந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தாவணகெரே: தாவணகெரேயில், மணல் வியாபாரியை மிரட்டி ‘மாமூல்' வசூல் செய்து வந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மணல் வியாபாரியிடம் ‘மாமூல்’
தாவணகெரே டவுன் பகுதிைய சேர்ந்தவர் முபாரக். இவர் அரசு அனுமதியுடன் சொந்தமாக மணல் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் முபாரக்குக்கு சித்ரதுர்காவை சேர்ந்த அசோக், மைசூருவை சேர்ந்த இம்ரான் சித்திக் ஆகிய 2 ரவுடிகள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது மணல் அள்ளி கொண்டுவர முபாரக்கிடம், 2 பேரும் மாதம் ரூ.4 லட்சம் ‘மாமூல்' கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இல்லையென்றால் மணல் எடுத்து செல்ல முடியாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த முபாரக் கடந்த ஒரு ஆண்டாக மாதம் ரூ.4 லட்சம் மாமுல் வழங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் முபாரக்கால் ‘மாமூல்' கொடுக்க முடியவில்லை.
2 ரவுடிகள் கைது
இதனால் ஆந்திரமடைந்த ரவுடிகள், முபாரக்குக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் செய்வதறியாது தவித்த முபாரக் தாவணகெரே புறநகர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story