பர்கூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் ராட்சத கல் விழுந்து வாலிபர் சாவு

பர்கூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் ராட்சத கல் விழுந்து வாலிபர் இறந்தார்.
பர்கூர்:
பர்கூர் அருகே ஜிட்டோப்பனப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. இங்கு பீகாரை சேர்ந்த பிரமோத்யாதவ் மகன் சோனுகுமார் (வயது 19) என்பவர் எந்திரத்தின் மூலம் ராட்சத கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எந்திரத்தின் மீது இருந்த ராட்சத கல் வாலிபர் மீது விழுந்தது. இதில் சோனுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் விரைந்து சென்று சோனு குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story