குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்


குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 5 May 2022 12:30 AM IST (Updated: 5 May 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமானார்.

ஆண்டிமடம், 
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 24). இவருடைய மனைவி ஏஞ்சல் தெரேசா (22). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று ஏஞ்சல் தெரேசா தனது தாயாரிடம் வாரச்சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிமடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற ஏஞ்சல் தெரேசாவை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story