வணிகர்கள் தின விழா
கடமலைக்குண்டுவில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர்கள் தின விழா நடந்தது.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டுவில் 39-வது வணிகர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர் தின விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
இதற்கு கடமலைக்குண்டு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் நல்லாசிரியர் கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் மாடசாமி, பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கொடியேற்றப்பட்டு பின்பு மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த விழாவை தொடர்ந்து சில்லறை வணிகத்தை காக்க சிறு, குறு தொழில் களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
Related Tags :
Next Story