பொதுமக்கள் புகார் எதிரொலி விவசாய நிலத்தில் மணல் கடத்தல் தடுத்து நிறுத்தம் துணை கலெக்டர் அதிரடி

காரைக்கால் அருகே விவசாய நிலத்தில் மணல் அள்ளி கடத்துவதை தடுத்து நிறுத்தி துணை கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
காரைக்கால்
காரைக்கால் அருகே விவசாய நிலத்தில் மணல் அள்ளி கடத்துவதை தடுத்து நிறுத்தி துணை கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
மணல் கடத்தல்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட மாதூர் முப்பைத் தங்குடி அருகே உள்ளது கோட்டப்பாடி கிராமம். இந்த கிராமத்தை சுற்றி சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான 1 ஹெக்டேர் விவசாய நிலத்தை விழுதியூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக அங்கிருந்து தினமும் மணல் ஏற்றிக்கொண்டு கோட்டப்பாடி கிராமம் வழியாக ஏராளமான லாரிகள் சென்றன.
சப்-கலெக்டர் நடவடிக்கை
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அங்கு சென்று பார்த்தபோது விவசாய நிலத்தில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்துவது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், துணை கலெக்டர் ஆதர்ஷிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக 20 அடி ஆழத்திற்கு மணல் அள்ளி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தொடர்ந்து மணல் அள்ள துணை கலெக்டர் ஆதர்ஷ் தடை விதித்தார்.
இதற்கிடையே மணல் கடத்தலால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story