258 பேருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி


258 பேருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 6 May 2022 8:46 PM GMT (Updated: 6 May 2022 8:46 PM GMT)

மதுரை காவலர் பயிற்சி பள்ளியில் படிக்கும் 258 பேருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை,

மதுரையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் படிக்கும் 258 பேருக்கு போக்குவரத்து விதிகள், போக்குவரத்து போலீசாரின் கடமைகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. அதன்படி மதுரை நகரில் கீழவாசலில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தெப்பக்குளத்தில் தங்கமணி, கோரிப்பாளையத்தில் சுரேஷ், தெற்குவாசலில் கணேஷ்ராம், காளவாசலில் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள்.
அதில் போலீசார் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும், சிக்னல் எவ்வாறு காண்பிக்க வேண்டும். பாதசாரிகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பது, விதிகளை மீறும் வண்டிகளை எவ்வாறு நிறுத்துவது, அவ்வாறு நிறுத்தும் போது நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, போக்குவரத்து போலீசாருக்கு உள்ள அதிகாரங்கள், என்ன சட்டத்தில் அதிகாரம் உள்ளது, எந்த செக்சனில் வழக்கு போடுவது, போக்குவரத்து நெரிசலின் போது எவ்வாறு அதனை கையாளுவது என்பது குறித்து 2 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டது. 
பின்னர் பயிற்சிக்கு வந்த போலீசாரை சிறிது நேரம் போக்குவரத்து எவ்வாறு ஒழுங்குப்படுத்துவது குறித்து நேரடி பயிற்சியும் அளிக்கப்பட்டது.


Next Story