பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு 328 நாட்கள் சிறை

பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு 328 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம், பாலவிநாயகர் நகரைச் சேர்ந்தவர் விக்கி (வயது 23). இவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத் முன்னிலையில் ஆஜரான விக்கி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இன்னும் ஒரு வருடத்துக்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன் எனவும், நன்னடத்தை பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் அதையும் மீறி கடந்த மாதம் அரும்பாக்கம் பகுதியில் விக்கி வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நன்னடத்தை பிரமாண பத்திர உறுதி மொழியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட விக்கியை 328 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
அதேபோல் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. இவர், கடந்த மாதம் 29-ந் தேதி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் முன் ஆஜராகி, இனி திருந்தி வாழ்வதாகவும், ஓராண்டுக்கு எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் அதையும் மீறி மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட ராஜேசை 363 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story