மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதை. இவரது மகன் பாலாஜி (வயது 24). டிரைவரான இவர் கடந்த 1-ந் தேதியன்று இரவில் தனது அண்ணன் மகேந்திரனின் மோட்டார் சைக்கிளை செல்லியம்பாளையத்தில் உள்ள தனது காட்டில் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். பின்னர் மறுநாள் அதிகாலை பாலாஜி எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து பாலாஜி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது விளாமுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் கலையரசன்(20) மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கலையரசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
Related Tags :
Next Story