நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருத்தணி தாசில்தார் விஜயகுமார் திருத்தணி-அரக்கோணம் ரோட்டில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அவருக்கு விவசாயிகள் நன்றி கூறினர்.
திருத்தணி,
திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருத்தணி-அரக்கோணம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் திறப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காரணம் ஏதுவும் தெரிவிக்கபடாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதனால் கடந்த மாதம் அறுவடை செய்த நெற்பயிர்களை விவசாயிகள் வயல்வெளி களத்திலே வைக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் களத்தில் உள்ள நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலைமை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரக்கோணம் சாலையில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தை திறக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை கண்டித்து சாலைமறியல் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க ஏற்பாடுகளை செய்தனர். இந்த நிலையில் திருத்தணி தாசில்தார் விஜயகுமார் திருத்தணி-அரக்கோணம் ரோட்டில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அவருக்கு விவசாயிகள் நன்றி கூறினர்.
Related Tags :
Next Story