மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 8 May 2022 6:00 PM IST (Updated: 8 May 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள சந்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவரத்னம். இவரின் மனைவி சின்னகண்ணு அம்மாள் (வயது 70). 

இவர் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சந்தமேடு மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு மோட்டார்சைக்கிள் திடீரென ஜீவரத்னம் மீது மோதியது. 

அதில் சின்னகண்ணு அம்மாள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்தியவர் மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

இந்த விபத்து குறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story