மது அருந்த பணம் தராததால் கழுத்தை நெரித்து மனைவி கொலை; தொழிலாளிக்கு வலைவீச்சு


மது அருந்த பணம் தராததால் கழுத்தை நெரித்து மனைவி கொலை; தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 May 2022 9:16 PM IST (Updated: 8 May 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

மது அருந்த பணம் தராததால் கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

மைசூரு: மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். தொழிலாளியான இவர் குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவரது மனைவி தேவ வீரம்மா (வயது 45). இந்த தம்பதிக்கு அனு என்ற மகன் உள்ளார். நேற்று மகன் அனு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது தாய் தேவவீரம்மா இறந்து கிடந்தார். இதைபார்த்து அனு அதிர்ச்சி அடைந்தார். உல்லாஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணவர் வெங்கடேஷ், குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் வெங்கடேஷ் ஆத்திரம் அடைந்து மனைவி என்றும் பாராமல் அவரது கழுத்தை நெறித்துள்ளார். இது குறித்து உல்லாஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடேஷை தேடி வருகின்றனர்.

Next Story