கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,822 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,822 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
x
தினத்தந்தி 8 May 2022 10:34 PM IST (Updated: 8 May 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,822 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 2,822 இடங்களில்  மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முன்னதாக கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
அதைத்தொடர்ந்து தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், நகரமன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றியகுழு தலைவர் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வாணியந்தல் ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மடம் பெருமாள், முருகன், சண்முகம், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக், நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story