சதாசிவ வைகுண்டபதியில் இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி


சதாசிவ வைகுண்டபதியில் இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி
x
தினத்தந்தி 9 May 2022 6:53 PM IST (Updated: 9 May 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி நாராயணபுரம் சதாசிவ வைகுண்ட பதியில் சித்திரை திருவிழாவிள் இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி நடந்தது.

உடன்குடி:
உடன்குடி நாராயணபுரம் சதாசிவ வைகுண்ட பதியில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு கண்ணாடி வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. தினமும் இரவு 8 மணிக்கு அய்யா பல்வேறு வாகனத்தில் பவனி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு இந்திரன் வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. இரவு 8 மணிக்கு ரிஷப வாகனத்தில் பவனியும், நள்ளிரவு 12 மணிக்கு திருநாமக்கொடி அமர்தல். பள்ளியுணர்த்தலுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை நாராயணபுரம் அன்பு கொடி மக்கள் செய்திருந்தனர்.

Next Story