விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணம்
விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் கிடந்த ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் -காடல்குடி சாலை அரசு மதுபான கடை அருகே காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புதூர் ஆனந்த குருக்கள் தெரு பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story