ஈரோடு -பவானி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்


ஈரோடு -பவானி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
x
தினத்தந்தி 10 May 2022 4:31 AM IST (Updated: 10 May 2022 4:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு -பவானி ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு
ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாநகர் பகுதியில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு சிறுவர் பூங்காவில் தேங்கி நின்ற தண்ணீர் நேற்று பாதாள சாக்கடை குழிக்குள் திறந்து விடப்பட்டது. அப்போது பாதாள சாக்கடை நிறைந்து தண்ணீர் ஈரோடு -பவானி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்றுக்காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை -53, சென்னிமலை -51, அம்மாபேட்டை -41, வரட்டுப்பள்ளம் -37, கவுந்தப்பாடி -31.2, தாளவாடி -28, கொடிவேரி -15, குண்டேரிப்பள்ளம் -16.8, மொடக்குறிச்சி -13, கோபி -9.6, பவானி -8.8, ஈரோடு -7, கொடுமுடி -4.2, சத்தி -4, நம்பியூர் -2. மாவட்டம் முழுவதும் மொத்தம் 334.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Next Story