கோத்தகிரி அருகே மரங்களில் தொங்கும் பலா பழங்களை சுவைக்கும் காட்டு யானைகள்


கோத்தகிரி அருகே மரங்களில் தொங்கும் பலா பழங்களை சுவைக்கும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 10 May 2022 8:38 PM IST (Updated: 10 May 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மரங்களில் காய்த்து தொங்கும் பலா பழங்களை காட்டு யானைகள் சுவைத்து வருகின்றன.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மரங்களில் காய்த்து தொங்கும் பலா பழங்களை காட்டு யானைகள் சுவைத்து வருகின்றன. 

பலா பழங்களை சுவைக்கும் காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கி உள்ளதால், கோத்தகிரி சாலை ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன. இவற்றை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. இவ்வாறு வந்து முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருவதுடன், அவ்வழியாக செல்லும் வாகனங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. 

வனத்துறையினர் அறிவுரை

இந்தநிலையில் பலாக் காய்களை உண்பதற்காக, முள்ளூர் கிராமப் பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகளும், குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் அருகே பெண் காட்டு யானை ஒன்றும், மாமரம் பகுதியில் ஆண் யானை ஒன்றும் சாலையை ஒட்டியப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. எனவே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யானைகளை சாலையில் பார்த்தால் ஒலிப்பானை பயன்படுத்தக் கூடாது. சுற்றுலாப் பயணிகள் யானைகளின் அருகே சென்று செல்பி புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். யானைகளுக்கு தொல்லை அளித்தல் கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story