மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2022 10:25 PM IST (Updated: 10 May 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் மது விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பாளையங்கோட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக இலந்தை குளம் பகுதியை சேர்ந்த சுடலைகண் (வயது 57) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே மது விற்றதாக கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (34) என்பவரை கைது செய்தனர். மொத்தம் அவர்களிடம் இருந்து 17 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.




Next Story