விழுப்புரம் பகுதியில் 150 வாகனங்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம் பகுதியில் 150 வாகனங்களில் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினா்.
விழுப்புரம்,
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் அதனை கண்டுபிடித்து அகற்றும்படி சென்னை போக்குவரத்து ஆணையர் நடராஜன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், விழுப்புரம்- புதுச்சேரி சாலை, விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு, தனியார் பஸ்கள் உள்ளிட்ட 150 வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி ஒழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
தொடர்ந்து, இதுபோன்று ஏர்ஹாரன்கள் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story