மாவட்ட செய்திகள்

15 ஆயிரத்து 228 பேர் தேர்வு எழுதினார்கள் + "||" + plus 2 exam written by 15 thousand 228 student

15 ஆயிரத்து 228 பேர் தேர்வு எழுதினார்கள்

15 ஆயிரத்து 228 பேர் தேர்வு எழுதினார்கள்
15 ஆயிரத்து 228 பேர் தேர்வு எழுதினார்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நேற்று 15 ஆயிரத்து 228 பேர் எழுதினார்கள். 634 பேர் வரவில்லை.
பிளஸ்2 பொதுத்தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வை 218 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 729 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 91 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அறையில் வைக்கப்பட்டு இருந்தன.
தேர்வு மையத்தின் ஒவ்வொரு அறையிலும் மாணவ-மாணவிகளின் பதிவெண்கள் மேஜையில் எழுதப்பட்டு தயார்படுத்தப்பட்டது. அதுபோல் தேர்வு மையத்தின் நுழைவுவாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு எந்தெந்த பதிவு எண் கொண்ட மாணவ மாணவிகள் எந்த கட்டிடத்துக்கு செல்ல வேண்டும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கணினி அறிவியல்
மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 91 தலைமை ஆசிரியர்களும், 91 துறை அலுவலர்களும், 1,608 அறை கண்காணிப்பாளராக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று புள்ளியல், கணினி அறிவியல், கணினி அப்ளிகேசன், உயிர்வேதியில், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், பொலிடிக்கல் சயின்ஸ், அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. புள்ளியல் பாடத்துக்கு 949 பேர் விண்ணப்பித்து 828 பேர் தேர்வு எழுதினார்கள். 121 பேர் தேர்வு எழுதவில்லை. கணினி அறிவியல் பாடத்துக்கு 5 ஆயிரத்து 867 பேர் விண்ணப்பித்து, 5 ஆயிரத்து 764 பேர் தேர்வு எழுதினார்கள். 103 பேர் தேர்வு எழுதவில்லை. கணினி அப்ளிகேசன் பாடத்துக்கு 8 ஆயிரத்து 775 பேர் விண்ணப்பித்து, 8 ஆயிரத்து 402 பேர் எழுதினார்கள். 373 பேர் எழுதவில்லை.
15,228 பேர் தேர்வு எழுதினர்
ஹோம் சயின்ஸ் பாடத்துக்கு 152 பேர் விண்ணப்பித்து 125 பேர் எழுதினார்கள். 27 பேர் எழுதவில்லை. இதுபோல் 21 பேர் உயிர் வேதியியல், 37 பேர் பொலிட்டிங்கல் சயின்ஸ், 49 பேர் அட்வான்ஸ் தமிழ், 2 பேர் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் பாட தேர்வை எழுதினார்கள். மொத்தம் 15 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்து 15 ஆயிரத்து 228 பேர் எழுதினார்கள். 634 பேர் தேர்வு எழுதவில்லை.