பணம் பறித்த 3 பேர் கைது
பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது மணலூர் கிராமம். இந்தபகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த மதன் (வயது21), நந்தகுமார் (20), சஞ்சய் (21) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது ஊழியர் மலைச்சாமியிடம் வாளைகாட்டி ரூ.2,500-ஐ பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரிதா பாலு வழக்கு பதிந்து மதன், நந்தகுமார், சஞ்சய் ஆகிய 3 பேரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story