சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை


சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 May 2022 8:50 PM GMT (Updated: 2022-05-12T02:20:47+05:30)

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.385-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.69-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.
சத்தியமங்கலம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்வதால் கனகாம்பரம் விளைச்சல் குறைவு என்றும், பூத்த பூக்கள் பறிப்பதற்கு முன்பே உதிர்ந்துவிடுவதாகவும் அதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.

Next Story