அசானி புயல் சின்னம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து


அசானி புயல் சின்னம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 12 May 2022 2:48 AM GMT (Updated: 12 May 2022 2:48 AM GMT)

அசானி புயல் சின்னம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்குவிமானங்கள் தாமதம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

ஆலந்தூர், 

வங்க கடலில் உருவாகி உள்ள ‘அசானி’ புயல் ஆந்திரா-ஒடிசா மாநிலங்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்திலும் பரவலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் லேசான மழை வரை பெய்தது. இந்த நிலையில், 2-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய 3 விமானங்களும், விஜயவாடா செல்ல வேண்டிய 2 விமானங்களும் ராஜமுந்திரி செல்ல வேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டன. 

அதேபோல் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு காலை 8.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் 11.30 மணிக்கும், காலை 8.30 மணிக்கும் செல்ல வேண்டிய விமானம் பகல் 1.30 மணிக்கும் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

Next Story