மோட்டார் சைக்கிள்கள் மோதல்-4 பேர் காயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் காயம் அடைந்தனர்
திருக்கடையூர்
திருக்கடையூர் அருகே நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25). இவர்கள் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் செம்பனார்கோவிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதேபோல் செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த நரசிம்மன் மகன் மணியரசன் குமார் (20), இவரது நண்பர் ஆறுபாதி புதுத்தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முருகேசன் (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே மேட்டிருப்பு பகுதியில் சென்றபோது இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மேற்கண்ட 4 பேரும் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இந்திரன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story