ஆசனூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; டிரைவா் உயிா் தப்பினாா்


ஆசனூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; டிரைவா் உயிா் தப்பினாா்
x
தினத்தந்தி 13 May 2022 2:39 AM IST (Updated: 13 May 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவா் உயிா் தப்பினாா்.

தாளவாடி
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் நவின்குமார் (வயது 26). இவர் தனது காரில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆசனூர் அருகே செம்மன் திட்டு என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நவின்குமார் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story