ஓட்டப்பிடாரம் அருகே புகையிலை பொருட்கள் விற்கப்பட்ட கடைக்கு சீல்

ஓட்டப்பிடாரம் அருகே புகையிலை பொருட்கள் விற்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலபஜாரில் சோனியா நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). இவர் அங்குள்ள மேலபஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 7-ந்தேதி புதியம்புத்தூர் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் 150 பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்து இருப்பதை கண்டு பிடித்தனர். இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ஓட்டப்பிடாரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக முத்துக்குமார் கடைக்கு புதியம்புத்தூர் போலீசார் முன்னிலையில் சீல் வைத்தார்.
Related Tags :
Next Story