திருக்கோகர்ணம் கோவிலில் சித்திரை திருவிழா


திருக்கோகர்ணம் கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 13 May 2022 8:03 PM GMT (Updated: 2022-05-14T01:33:17+05:30)

திருக்கோகர்ணம் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி சாமி, அம்பாளுக்கு நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்வான நேற்று சப்பரத்தில் சாமி, அம்பாள் புறப்பாடு, பஞ்ச மூர்த்தி புறப்பாடு வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு சேமாஸ்கந்தர், பிரகதாம்பாளுக்கு வைரம், தங்க நகைகள், நவரத்தினங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலில் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் வெளியே வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story