காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

சின்னமனூர் அருகே, வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி:
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் தொழில் முனைவோர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந்தது.
அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார்.
காளான் வளர்ப்பு பயிற்சியாளர்கள் கண்ணன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் உள்ள காளான் வளர்ப்பு குடிலுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா விளக்கம் அளித்தார்.
மேலும் விளைவித்த காளான்களை விற்பனை செய்யும் முன்பு உணவு மற்றும் தரங்கள் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து சின்னமனூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் விளக்கம் அளித்தார்.
அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுனர் ரம்யாசிவசெல்வி பேசினார். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story