போலியான அழைப்புகளை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்

செல்போனில் வங்கிகள் பெயரில் வரும் போலியான அழைப்புகளை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
வெளிப்பாளையம்:
செல்போனில் வங்கிகள் பெயரில் வரும் போலியான அழைப்புகளை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை புதிய பஸ் நிலையத்தில், மாவட்ட குற்றப்பிரிவு சார்பில், மோசடி நபர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பணம், பாஸ்போர்ட் ஆகியவற்றை கொடுத்து ஏமாற வேண்டாம்.
போலியான அழைப்புகள்
தங்கள் செல்போனில் வங்கிகள் பெயரில் வரும் போலியான அழைப்புகள், குறுச்செய்திகளை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, அரசு உரிமம் பெறாத சிட்பண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
உங்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைத்து தருவதாக கூறி போலியான அழைப்புகள் மூலம் பணம் பறிக்கும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நபர்களிடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story