சாத்தான்குளம் அருகே நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா


சாத்தான்குளம் அருகே நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 14 May 2022 11:01 PM IST (Updated: 14 May 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதியதாக உட்புற நூலக கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பாலமேனன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் முருகன் வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டத்தி, வார்டு உறுப்பினர் சேர்மக்கனி, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் லூர்துமணி, பார்த்தசாரதி, சக்திவேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Next Story