மலைப்பாம்பு பிடிபட்டது


மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 14 May 2022 11:47 PM IST (Updated: 14 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

மலைப்பாம்பு பிடிபட்டது.

அன்னவாசல்:
அன்னவாசல் அருகே சத்தியமங்கலம் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள வயல் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர். 

Next Story