தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 May 2022 5:27 PM GMT (Updated: 2022-05-16T22:57:48+05:30)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கொடுந்துறை அருகே உள்ள பாஞ்சம்பட்டி கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள்  உள்ளன. இதில் சில நாய்கள் வெறிப்பிடித்து காணப்படுகிறது. இவை சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், பாஞ்சம்பட்டி, திருச்சி.
இதேபோல் திருச்சி மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பூக்கொல்லை தெரு, கிருஷ்ணாபுரம், அலங்கநாதபுரம் வீரமாநகரம், வரகனேரி, தோப்புத்தெரு, விஸ்வாஸ் நகர், மகாலட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரிப்பால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடக்க முடியவில்லை. இவைகள் குழந்தைகளை கண்டால் கடிக்க வருவதினால் இப்பகுதி பெற்றோர் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சையது முஸ்தபா, பூக்கொல்லை தெரு, திருச்சி. 
பாதியில் நிற்கும் சாலை பணி 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தொட்டியம் தாலுகா பாலசமுத்திரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை சீரமைக்கப்பட்டு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில் தார் ஊற்றப்படாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
லட்சுமிகாந்த், பாலசமுத்திரம், திருச்சி. 
குண்டும், குழியுமான சாலைகள் 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்-சமயபுரம் 4 ரோடு வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வீரகணேசன், மண்ணச்சநல்லூர், திருச்சி.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, மூவானூர் கிராமத்திலிருந்து பெரமங்கலம் வரை செல்லும் தார் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமான உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சரவணன், மூவானூர், திருச்சி. 

Next Story