ஆர் டி ஓ அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

குண்டடம் அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை மீட்கக்ேகாரி அடுத்த மாதம் 7-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
தாராபுரம்
குண்டடம் அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை மீட்கக்ேகாரி அடுத்த மாதம் 7-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசனிடம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கோப்பணகவுண்டன்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பட்டத்தரசி அம்மன் கோவில்
குண்டடத்தை அடுத்த சூரியநல்லூர் ஊராட்சி கோப்பண கவுண்டன் பாளையத்தில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் சார்பில் பட்டத்தரசி அம்மன் மற்றும் கண்ணியாத்தாள்- கருப்பராயன் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின்போது கிடா வெட்டி உறவினர்கள் விருந்து படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோவிலை சுற்றி வரும் பாதையை அதன் அருகிலுள்ள நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊர் பொதுமக்கள் வழிபட்டு வந்த கோவில் திருவிழா 5ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த கோவிலுக்கு அரசு பட்டா வழங்க கோரி ஊர் பொதுமக்கள் சார்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம்மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
காத்திருப்பு போராட்டம்
எனவே கோவில் வழிபட்டு உரிமையை மீட்கக்கோரி அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இதில் திரளானவர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து ஆர்.டி.ஓ குமரேசன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக மனு கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story