ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #TeachersDay
புதுடெல்லி,
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறியிருப்பதாவது:- “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story